Preaload Image

கம்புறுக்க புற வற அபிவிருத்தி திட்டம

கப்ருக நிதி” வேலைத்திட்டம்

கப்ருக சங்கம் மீள்தயாரித்தல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைக்கு கூட்டாக உள்ளடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இங்கு எதிர்ப்பார்க்கப்படுவது சிறிய மற்றும் மத்திய அளவில் தோட்ட உரிமையாளர்களினை ஒன்று சேர்த்தல் மற்றும் அவர்களினை கப்ருக சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்காக ஆகும். இந்த சங்கங்கள் மூலம் பயிர்ச்செய்கையாளர்களுக்கு விஞ்ஞான ரீதியான பயிர்ச்செய்கை முறை உபயோகத்திற்காக ஊக்கப்படுத்தப்படும். அந்த சங்கத்தின் மூலம் பயிர்ச்செய்கையாளர்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகளில் புதிய தொழிநுட்ப பாவனை, தென்னங் கன்றுகளின் பாதுகாப்பு, மீள்தயாரித்தல் நடவடிக்கையினை பழக்கப்படுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் பெற்றுக் கொடுப்பதுடன், அதன் மூலம் உற்பத்தி செலவினை குறைப்பதற்கான வழி ஏற்படும். அவ்வாறே, சங்கத்தின் மீளாய்வின் ஊடாக அரசாங்கத்தின் நிதிப்படுத்தல் உட்பட மத்திய அளவிலான அலகினை உருவாக்கலுக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். இந்த சங்கம் அரசாங்கத்தின் விலை உதவி திட்டம் (price support scheme) நடைமுறைப்படுத்தப்படும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விலைக்கு கொள்வனவு செய்யும் மத்திய நிலையமாக செயற்படும்.

வேலைத்திட்டத்தின் நோக்கம்

  1. கொள்ளளவு வளர்ச்சி, திறன் அபிவிருத்தி, துறை நிதியிடல், தொழில் முயலுநர் நிலை அபிவிருத்தி போன்ற பல்வேறு பயிற்சி வேலைத்திட்டங்கள் மூலம் பயிர்ச்செய்கையாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் பெண்களினை வலுப்படுத்தல் மற்றும் பயிர்ச்செய்கையாளர்கள் புதிய முகத்துடன் சுய- விசுவாசத்துடன் கூடிய நபர்களாக உருவாக்குவதற்கு.
  2. தேங்காய் உள்ளீடு, தேங்காய் மட்டை, தேங்காய்ச் சிரட்டை, தென்னம் பலகை, தேங்காய் தண்ணீர் மற்றும் ஓலை, தென்னங் கல் மற்றும் பாணி உற்பத்தி ஆகியன மூலம் சேர்க்கப்பட்ட பெறுமதியில் உச்ச விலையின் பூர்த்தியான உற்பத்தியினை மேற்கொள்வதற்கு மற்றும் சந்தைப்படுத்துவதற்காக புதிய தொழிநுட்பத்தினை அறிமுகப்படுத்துவதற்கு மற்றும் அதன் உற்பத்திகளுக்கு பொருத்தமான தேங்காய்/ தென்னை வகையினை அதிகரிப்பதற்கு.
  3. தென்னை உற்பத்தியினை நானாவிதப்படுத்துவதற்கு, பெறுமதி சேர்க்கப்பட்ட இடை உற்பத்திகளினை உற்பத்தி செய்தல் மற்றும் கிராமிய மட்டத்தில் சிறிய மற்றும் மத்திய அளவிலான தென்னங் கைத்தொழிலினை உருவாக்குவதற்கு
  4. தென்னந் துறையில் தொழில் வாய்ப்புக்களின் அளவினை அதிகரிப்பதற்கு, அந்த பிரிவில் உள்ள பயிர்ச்செய்கையாளர்களுக்கு வாழ்க்கை நிலைமையினை உயர்த்துவதற்கு மற்றும் அவர்களுக்கு சமூக ஏற்றுக் கொள்ளலினை உறுதிப்படுத்துவதற்கு.
  5. பயிர்ச்செய்கையாளர்களினை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகளுடன் இணைப்பதற்கு, பயிர்ச்செய்கையில் பிரவேசிப்பதற்கு மற்றும் தொடர்பு மற்றும் தொடர்பான சிக்கல்கள், தடைகளினை தீர்ப்பதன் ஊடாக பயிர்ச்செய்கையினை நிலைத்து நிற்கும் தொழிலாக நியமிப்பதற்கு.
  6. பயிர்ச்செய்கையாளர்களினை ஒன்றுதிரட்டுவதன் ஊடாக பிரதான பொருளாதார பிரிவில் பெறுமதி சங்கிலியினை (value chains) வலுப்படுத்துவதற்கு, மிகவும் சிறந்த சந்தைவாய்ப்பு மற்றும் நிதிப்பிரிவுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கு, வாழ்க்ைகத் தொழிலுக்கான உதவிச் சேவையினை பெற்றுக் கொடுப்பதற்கு மற்றும் வேறு தொழிநுட்பத்தினை அதிகரிப்பதற்கு.
  7. தென்னைப் பயிர்ச்செய்கையினை அடிப்படையாகக் கொண்ட பண்ணை முறைமைக்கு வேறு பயிர்கள் மற்றும் மண் வளத்தினை அறிமுகப்படுத்தல் புற் கரண்கள் உற்பத்தி, பொருளாதார பயிர்கள்/ கால்நடைகளுடன் இடைப் பயிர்ச்செய்கை, பழங்கள், கறிச் சரக்குகள், மரக்கறிகள் உற்பத்தியினை ஊக்குவிப்பதன் ஊடாக காணிகளின் செறிவுத்தன்மையினை முன்னேற்றுவதற்கு

பிரதான நடவடிக்கைகள்

  1. அனைத்து மாவட்டங்களிலும் கப்ருக மக்கள் குழுக்களினை வலுப்படுத்தல், அதன் குழு வாழ்க்கைத் தொழிலினை ஊக்குவிக்கக்கூடிய மற்றும் வருமான உற்பத்தியினை சிறந்ததாக முகாமைத்துவம் செய்யக்கூடிய நிலைத்து நிற்கும் குழுவாக நியமிப்பதற்கு.
  2. உயர்ந்த விலையினைப் பெற்றுக் கொள்ளக்கூடிய தென்னையுடன் தொடர்புடைய பூர்த்திப் பொருட்களினை தயாரித்தல் மற்றும் தொடர்புடைய சிறிய மற்றும் மத்திய அளவிலான கைத்தொழில்களினை நிலைப்படுத்தல் மற்றும் அதன் உற்பத்திகளுக்கு சந்தைபாய்ப்பினை அறிமுகப்படுத்தல், தேங்காய் என்பது விரிவான வீச்சுடைய சிறிய மற்றும் மத்திய அளவிலான உற்பத்தி கைத்தொழிலினை அபிவிருத்தி செய்யக்கூடிய கைத்தொழிலாகும்.
  3. கடன் நிதி மூலம், சந்தைவாய்ப்பு / சந்தைப்படுத்தல் உபாயங்கள் மற்றும் சந்தைவாய்ப்பின் அறிவினை முன்னேற்றல்.
  4. காணிகளின் செறிவுத் தன்மை மற்றும் மொத்த பண்ணை உற்பத்தித் திறனினை அதிகரிக்கும் பொருட்டு பொருளாதார பயிர்கள் மற்றும் கால்நடை வேளாண்மையினை அறிமுகப்படுத்துவதன் ஊடாக பயிர்களின் நானாவிதப்படுத்தல் முறைமையினை தயாரித்தல்
  5. பரவலாக்கல் அலுவலர்கள், தென்னைப் பயிர்ச்செய்கையாளர்கள், உற்பத்தியாளர்கள் கிராமிய இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்ற பல்வேறு குழுக்களுக்காக உருவாக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளின் தேவைகளினை அடிப்படையாகக் கொண்ட திறன் அபிவிருத்தி பயிற்சியினை அடையாளம் காண்தல் மற்றும் நடாத்துதல்.

கப்ருக சங்கத்திற்காக அங்கத்தவர்களினை சேர்த்துக் கொள்ளுதல்.

ஒரு தென்னை மரமத் உள்ள பயிர்ச்செய்கையாளருக்கும் கப்ருக சங்கத்தின் அங்கத்துவத்தினைப் பெற்றுக் கொள்ள இயலும்.

அனைத்து தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களின் பெயர்களும் உரிய பிரதேசத்தின் கப்ருக சங்கங்களில் அங்கத்தவர்களாக பதிவு செய்ய இயலும். ஒரு சங்கத்தின் அங்கத்தவர் 10 தொடக்கம் 100 வரையான அளவில் இருக்க முடியும். உட்பிரவேச கட்டணம் நூறு ரூபாய்களாகும் (ரூ.100/=) என்பதுடன் மாதாந்தம் கட்டாய சேமிப்பு ரூ.50/= ஆகும். (குரும்மை இரண்டினது விலை.). அதன் சங்கம் சமூக மற்றும் சுயாதீனமாக செயற்பட இயலும். இந்த சங்கங்கள் கௌரவ தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 10 பேரினால் உருவாக்கப்பட்ட நிறைவேற்று குழுக்கள் மூலம் நிருவகிக்கப்படுவதுடன் அதன் சங்கம் கப்ருக நிதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட இயலும். இந்த சங்கம் அரசாங்க, தனியார் பிரிவுகள் மற்றும் அங்கத்தவர்களுக்கிடையல் தொடர்பினை ஏற்படுத்தும் விதத்தில் செயற்படல் வேண்டும்.

[table id=3 /]

கப்ருக சங்கங்களின் பிரதிபலன்கள்

குடும்பங்கள் மற்றும் குழுக்களுக்கிடையில் புரிந்துணர்வு விசுவாசம் மற்றும் தொடர்பினை உயர்த்துவதன் ஊடாக சமூக மூலதனத்தினை கட்டியெழுப்பல்

தென்னம் மரத்தில் உள்ள அதிவிசால மூலப்பொருட்களினை உபயோகித்து உயர்ந்த விலையுடைய உற்பத்திகளுக்கு ஈடுபடுத்தல் மற்றும் பங்களிப்பு வழங்கல் மூலம் சிறிய தோட்ட உரிமையாளர்களின் வருமான மட்டத்தினை உயர்த்துதல்.

கைப்பணிப் பொருட்களினை உற்பத்தி செய்தல், சிறிய மற்றும் மத்திய அளவுடையாதாக வகைப்படுத்தல், சிலோன் கொக்கனட் கிராப்ட் (CCC) ( இலங்கை தென்னையுடன் தொடர்புடைய கைப்பணி) இனை அபிவிருத்தி செய்தல் மற்றும் கப்ருக உற்பத்திகளுக்கு விசாலமான கவர்ச்சியினைப் பெற்றுக் கொடுத்தல்.

நீண்டகால நிலைத்து நிற்கும் தன்மையினை உறுதிப்படுத்தல் மற்றும் தென்னை கைத்தொழிலினை வளர்ப்பதற்காக கப்ருக துறைக் கடன் வேலைத்திட்டத்தின் மூலம் நிதி வசதிகளினை வழங்கல்.

மக்களுடைய வியாபார மத்திய நிலையமாக முகாமைத்துவம் செய்ய்பபடும் கப்ருக வள மத்திய நிலையங்களுக்கு ( மத்திய நிலையங்கள் 80) தேவையான உபகரணங்கள், கொள்ளளவு அதிகரிப்பு வேலைத்திட்டங்கள், சந்தைவாய்ப்பு அறிவினைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற உதவிகளினை வழங்குவதன் ஊடாக மேலும் வலுப்படுத்தல்.

கப்ருக சங்கங்கள், பயிர்ச்செய்கையாளர்கள், பெண்கள் குழுக்கள், ஆய்வு அலுவலர்கள் மற்றும் பரவலாக்கல் ஊழியர்களுக்கான பயிற்சி வேலைத்திட்டத்தினை உருவாக்கல்.